பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 July 2019 10:45 PM GMT (Updated: 16 July 2019 7:19 PM GMT)

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்தியஅரசை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் சேவையா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்துகுமரன், செந்தில்நாதன், சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story