கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரூ.25 ஆயிரம் புகையிலையும் சிக்கியது


கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரூ.25 ஆயிரம் புகையிலையும் சிக்கியது
x
தினத்தந்தி 17 July 2019 3:00 AM IST (Updated: 17 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலையும் சிக்கியது.

செங்கோட்டை, 

செங்கோட்டையில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலையில் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயிலில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது பயணிகள் இருக்கைக்கு அடியில் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளும், 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளும் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரெயிலில் சோதனை நடத்துவதை பார்த்ததும், ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செங்கோட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை தேடி வருகிறார்கள்.

Next Story