பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பல மடங்கு உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது, திருச்சி என்.எஸ்.பி. சாலையில் ஆட்டோ செல்ல அனுமதிக்க வேண்டும், திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க நிர்வாகிகள் அழகப்பன், அப்பாஸ் உள்பட ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசே, மத்திய அரசே பெட்ரோல், டீசல் மீது பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி உயர்வை ரத்து செய் என்பது உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story