பாகனேரியில் மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை அருகே பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
கல்லல்,
சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. பாகனேரி-மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 58 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, நடுமாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நெற்புகப்பட்டி வாசினிநந்தகுமார் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பி.ஆர்.வி. குரூப்ஸ் வண்டியும், 3-வது பரிசை வீழனேரி சரவணன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நொண்டி கோவில்பட்டி துரைப்பாண்டி வண்டியும், 2-வது பரிசை குண்டேந்தல்பட்டி சுப்பு வண்டியும், 3-வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் வண்டியும் பெற்றது.
இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயம் மேலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா வண்டியும், 2-வது பரிசை வெள்ளஞ்சான்பட்டி கிரண்ராஜ் மற்றும் சொக்கநாதபுரம் பிரபா வண்டியும், 3-வது பரிசை மேலூர் குமணன் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை திருச்சி செந்தில்பிரசாத் வண்டியும், 2-வது பரிசை மேலூர் அழகன்கவுசிக் வண்டியும், 3-வது பரிசை சின்னமனூர் லிங்கேஸ்பாண்டியன் வண்டியும் பெற்றது.
முடிவில் பந்தயத்தில் வென்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story