15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் லூயி பிரான்சிஸ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

வழங்க வேண்டும்

நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு, துறை குறைப்பு தொடர்பான ஆதிசேஷய்யா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story