ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 19 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யக்கோரி மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற நிர்வாகி பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், நிர்வாகிகள் ரஞ்சித், வாசு, கோபி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் விளைநிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக கைவிட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோஷங்களை எழுப்பினர்.

Next Story