மாவட்ட செய்திகள்

ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் + "||" + Advisory Meeting for all Officers on Jal Shakti Abhiyan Project Improvement

ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒருங் கிணைப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளருமான சஞ்சீவ் பட்ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.


நாகை மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் ஜல் சக்தி அபியான் எனப்படும் நீர்வள ஆதாரங்களை பெருக்கி நீரினை சேமிக்கும் திட்ட பணிகளை பல்வேறு துறைகளால் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை செயல்படுத்த உள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் கிரிதர், தரம்வீர்் சிங் ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர்.

விழிப்புணர்வு

ஜல் சக்தி அபியான் இயக்கத்தில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர்்் சேகரித்தல், பாரம்பரிய குளங்கள்-நீர்நிலைகளை சீரமைத்தல், மறுபயன்பாடு ஆழ்குழாய் கிணறுகளை நிரப்பும் அமைப்பு உருவாக்குதல், ஆற்றுப்படுகை வளர்ச்சி, தீவிர காடு வளர்ப்பு உள்ளிட்ட 5 தலைப்புகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மாணவர்கள், பொதுமக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன் உள்பட அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
3. விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
4. அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் 8,313 அலுவலர்கள் கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 8,313 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
5. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.