தமிழக அரசை கண்டித்து பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசை கண்டித்து பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பேரழிவு திட்டங்களை தமிழக மக்கள் மீது திணிக்க கூடாது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை காவிரி பாசன பகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் வலியுறுத்தி இருந்தது.

அதன்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசை கண்டித்து நேற்று கோட்டூர் அருகே காரியமங்கலம் கிராமத்தில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிறுவன தலைவர் லெனின் தலைமை தாங்கினார். விவசாய மன்ற மாநில தலைவர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story