மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் சங்கு ஊதி முற்றுகை போராட்டம்


மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் சங்கு ஊதி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் சங்கு ஊதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள திருச்சி மண்டல அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு சங்கு ஊதி பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினர்.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் சண்முகம் தலைமையில் ஆண்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போதே வருங்கால வைப்புநிதி தொகை, பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் மண்டல பொதுமேலாளர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 1.9.2010-க்கு முன்பு ஓய்வு பெற்றோர் குடும்ப வாரிசுகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும். மருத்துவ தகுதியின்மையால் ஓய்வு பெற்றவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story