ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 355 பெண்கள் உள்பட 750 பேர் மீது வழக்கு
நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 355 பெண்கள் உள்பட 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் கடந்த 23-ந் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் நாகை அவுரித்திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வரை சென்றனர். இதனால் நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேரணியை தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்ற போது கலெக்டர் சுரேஷ்குமார் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
750 பேர் மீது வழக்கு
இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போராட்டத்தில் கலந்துகொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை மாவட்ட செயலாளர் நாகை மாலி, தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து மற்றும் 355 பெண்கள் உள்பட 750 பேர் மீது பேர் 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story