மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர்கள் தப்பு அடித்து ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர்கள் தப்பு அடித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 7:40 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர்கள் தப்பு அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கணேசன், துணைத்தலைவர்கள் பிரிட்டோ, ராமச்சந்திரன், பொருளாளர் மலைச்சாமி, மாநகர தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தின் போது தப்பு அடித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திரும்ப பெற வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் சேவை தொழில் புரியும் ஆட்டோ தொழிலை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் இன்சூரன்சு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சுய தொழில் புரியும் ஆட்டோ தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கீழராஜவீதி செல்லும் சாலையை வாகனப்போக்குவரத்துக்கு தடை செய்யாமல் ஒரு வழி சாலையாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ. சி. மாவட்ட தலைவர் சேவையா, துணை செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிர மணியன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்தார். முடிவில் மாநகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.


Next Story