திருச்செந்தூரில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
திருச்செந்தூரில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் மகன் வசந்த் (வயது 21), அஜீத்குமார் (19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் அங்குள்ள கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது சிலர் அங்குள்ள மற்றொரு கோவிலின் முன்பு நடனமாடினர்.
இதனை வசந்த், அஜீத்குமார் ஆகிய 2 பேரும் கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் வசந்த், அஜீத்குமார் ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் கூலி தொழிலாளியான ஆனந்தராம கிருஷ்ணனை (27) கைது செய்தனர். மேலும் தலைமறைவான அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் மகன் இசக்கிமுத்து என்ற டேவிட், கணேசன் மகன் அசுபதி என்ற கார்த்திகேயன், பரமசிவன் மகன் முத்துசெல்வன் என்ற வீரப்பன், முத்துகுமார் மகன் பாலசுப்பிரமணியன் என்ற ராஜா ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story