மாவட்ட செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளியிடம் 30 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாக்டர் கைது + "||" + At the Primary Health Center Doctor arrested for accepting bribe of Rs 30

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளியிடம் 30 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாக்டர் கைது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளியிடம் 30 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாக்டர் கைது
சாங்கிலி மாவட்டம் குர்லூப் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக இருப்பவர் இஸ்லாம்பூரை சேர்ந்த நித்தின் காந்தி.
புனே,

நித்தின் காந்தி அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் வாங்கி வந்துள்ளார். அண்மையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சைக்காக 30 ரூபாய் வாங்கி இருக்கிறார்.

இதுபற்றி அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது நோயாளிகளிடம் பண வசூலில் ஈடுபட்ட டாக்டர் நித்தின் காந்தியை அவர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை