தப்பி வந்த பெரியகுளம் சிறுவன் கொடுத்த தகவலால் கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு உசிலம்பட்டி தம்பதி கைது
பெரியகுளத்தை சேர்ந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அங்கு கொத்தடிமைகளாக இருந்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தேனி,
கர்நாடக மாநிலத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் இருந்து தப்பி வந்த பெரியகுளத்தை சேர்ந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அங்கு கொத்தடிமைகளாக இருந்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகனுக்கு 9 வயது இருக்கும் போதே குடும்ப வறுமை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முறுக்கு தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால், அதன்பிறகு ஒருமுறை கூட அவன் தனது சொந்த ஊருக்கு வரவில்லை.
அவ்வப்போது செல்போனில் மட்டும் தனது பெற்றோருடன் பேசி வந்தான். இந்த நிலையில் ஒருமுறை கர்நாடாகாவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு சிறுவனின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் மகனிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது, அவன் அங்கிருந்து சென்று விட்டதாக கம்பெனி ஊழியர்கள் கூறினர். இதையடுத்து தங்கள் மகனை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த பெற்றோர் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அதுகுறித்து புகார் செய்தனர்.
அதன்பேரில் தென்கரை போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் அவர் எந்த முகவரியில் வேலை பார்த்தார் என்பது தெரியாததால் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்தான்.
தகவல் அறிந்ததும் அங்கு சென்ற தென்கரை போலீசார் மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவன், கர்நாடகாவில் இருந்து தப்பி வந்து வேலூரில் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரியில் வேலை பார்த்ததாகவும், அங்கு இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் தான் வேலை பார்த்த முறுக்கு கம்பெனியில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தான்.
அங்குள்ள உத்தரகண்டா மாவட்டம், மதனகிரி பகுதியில் உள்ள முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக இருந்த 3 சிறுவர்களை மீட்டனர். இதில் 2 பேர் 14 வயது சிறுவர்கள், ஒருவன் 16 வயது சிறுவன். இவர்களில் ஒருவன் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவன், மற்ற 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு பகுதியை சேர்ந்தவர்கள். மேலும், அந்த கம்பெனியை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமன் (48), அவருடைய மனைவி மகாதேவி (45) ஆகியோர் நடத்தி வருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக உத்தரகண்டா மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில், அங்குள்ள அங்கோலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் ராமன், மகாதேவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவருடைய இளைய மகன் கருப்புசாமி என்பவரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் 3 பேர் மற்றும் தப்பி வந்த சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர்களின் பெற்றோரை அழைத்து கலெக்டர் அறிவுரை வழங்கினார். மீட்பு பணிக்கு சென்ற அதிகாரிகள் குழுவினருக்கும் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் 4 சிறுவர்களும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தேனியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 3 பேர் மற்றும் தப்பி ஓடி வந்த சிறுவனையும் சேர்த்து 4 பேரும், கொத்தடிமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதற்காக கர்நாடக மாநில தொழிலாளர் துறை மூலம், விடுதலை பத்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பத்திரம் பெற்றுள்ளதால் இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். அதன்பிறகு, இதுதொடர்பான வழக்கு முடிவடைந்ததும் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்களை கொத்தடிமையாக வைத்து இருந்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்களிடம் கேட்டபோது, ‘தினமும் காலை 6 மணிக்கு எழுந்துவிடுவோம். இரவு 7 மணி வரை வேலை பார்ப்போம். இரவில் மட்டுமே சமையல் செய்வார்கள். இரவு 7 மணியளவில் உணவு கொடுப்பார்கள். அந்த சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை 11 மணியளவில் பழைய சோறாக தருவார்கள். ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவு. வேலையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தாலோ, தூங்கி விட்டாலோ அடிப்பார்கள். சரியாக வேலை செய்யாவிட்டால் அடித்து துன்புறுத்தி, உடலில் சூடு வைப்பார்கள்’ என்றனர். இதில், மணிகண்டனின் உடலில் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டதற்கான தழும்புகள் உள்ளன. மேலும், அவருடைய கையில் அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் அவனுடைய பெற்றோரும், ஐ.ஜே.எம். என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து இதுதொடர்பாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவில் கொத்தடிமையாக உள்ள சிறுவர்களை மீட்க கலெக்டரின் உத்தரவின்பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார், தாசில்தார் சுந்தர்லால், பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார், ஏ.ஜே.எம். தொண்டு நிறுவன பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 22-ந்தேதி கர்நாடகா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்குள்ள உத்தரகண்டா மாவட்டம், மதனகிரி பகுதியில் உள்ள முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக இருந்த 3 சிறுவர்களை மீட்டனர். இதில் 2 பேர் 14 வயது சிறுவர்கள், ஒருவன் 16 வயது சிறுவன். இவர்களில் ஒருவன் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவன், மற்ற 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு பகுதியை சேர்ந்தவர்கள். மேலும், அந்த கம்பெனியை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமன் (48), அவருடைய மனைவி மகாதேவி (45) ஆகியோர் நடத்தி வருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக உத்தரகண்டா மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில், அங்குள்ள அங்கோலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் ராமன், மகாதேவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவருடைய இளைய மகன் கருப்புசாமி என்பவரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் 3 பேர் மற்றும் தப்பி வந்த சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர்களின் பெற்றோரை அழைத்து கலெக்டர் அறிவுரை வழங்கினார். மீட்பு பணிக்கு சென்ற அதிகாரிகள் குழுவினருக்கும் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் 4 சிறுவர்களும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தேனியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 3 பேர் மற்றும் தப்பி ஓடி வந்த சிறுவனையும் சேர்த்து 4 பேரும், கொத்தடிமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதற்காக கர்நாடக மாநில தொழிலாளர் துறை மூலம், விடுதலை பத்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பத்திரம் பெற்றுள்ளதால் இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். அதன்பிறகு, இதுதொடர்பான வழக்கு முடிவடைந்ததும் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்களை கொத்தடிமையாக வைத்து இருந்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்களிடம் கேட்டபோது, ‘தினமும் காலை 6 மணிக்கு எழுந்துவிடுவோம். இரவு 7 மணி வரை வேலை பார்ப்போம். இரவில் மட்டுமே சமையல் செய்வார்கள். இரவு 7 மணியளவில் உணவு கொடுப்பார்கள். அந்த சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை 11 மணியளவில் பழைய சோறாக தருவார்கள். ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவு. வேலையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தாலோ, தூங்கி விட்டாலோ அடிப்பார்கள். சரியாக வேலை செய்யாவிட்டால் அடித்து துன்புறுத்தி, உடலில் சூடு வைப்பார்கள்’ என்றனர். இதில், மணிகண்டனின் உடலில் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டதற்கான தழும்புகள் உள்ளன. மேலும், அவருடைய கையில் அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story