அனுமதியின்றி வெண்ணாற்றில் மணல் அள்ளிய 7 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்
தஞ்சை அருகே அனுமதியின்றி வெண்ணாற்றில் மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள மேலவெளி காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியில் வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கள்ளப்பெரம்பூர் போலீசார் காமாட்சி அம்மன் தோட்டம் அருகே உள்ள வெண்ணாற்றுக்கு விரைந்து சென்றனர். அப்போது வெண்ணாற்றில் சிலர் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் தஞ்சை களிமேடு அருகே உள்ள பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன்(வயது40), வீரையன்(54), பிரசாத்(28), பன்னீர்செல்வம்(45), செல்வராஜ்(55), மதி(46), பிரசாந்த்(27) என தெரியவந்தது. இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 8 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிஓடிய துளசியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story