புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன், ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர். பின்னர் மீண்டும் இதுபோல் நடக்க கூடாது என்று எச்சரித்து சென்றனர்.

Next Story