பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான மேலும் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான மேலும் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற சுரேஷ் பாண்டியன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது புதுக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் சுரேஷ்பாண்டியனை மர்மநபர்கள் கடந்த 7-ந் தேதி காலையில் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் சன்னாசி பாண்டி (29), மணிகண்டன் (26), யோகேஸ்வரன் (22) உள்பட 6 பேரை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3 பேர் மீது குண்டர் சட்டம்
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய யோகேஸ்வரன், மணிகண்டன், சன்னாசிபாண்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உமா மகேஸ்வரி யோகேஸ்வரன், மணிகண்டன், சன்னாசிபாண்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யோகேஸ்வரன், மணிகண்டன், சன்னாசிபாண்டி ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளதற்கான ஆணைகளை போலீசார் வழங்கினர்.

Related Tags :
Next Story