தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகலில் ரெயில் இயக்கக்கோரி ரெயில் பயனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகலில் ரெயில் இயக்கக்கோரி ரெயில் பயனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் அயனாபுரம் நடராஜன் தலைமை தாங்கினார். ரெயில் பயனாளிகள் சங்கத்தை சேர்ந்த கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட பொருளாளர் வாசுதேவன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை வக்கீல் ஜீவக்குமார் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி- தஞ்சை வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்படும் சூழலில் 1 மணி நேரத்துக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும். 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இயக்கப்படாமலேயே பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். தஞ்சை- சென்னை இடையே பகல்நேர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்க வேண்டும்.
திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். பாலக்காடு- திருச்சி ரெயிலை பாலக்காடு- தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். ஹவுரா- திருச்சி வாராந்திர ரெயிலை தஞ்சை வரையும், மயிலாடுதுறை- தஞ்சை ரெயிலை மயிலாடுதுறை- பழனி வரையும் நீட்டிக்க வேண்டும்.
தஞ்சை- பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை- அரியலூர் வழித்தடம் அமைக்க வேண்டும். பூதலூர்- ரெயில்நிலைய டிக்கெட் கவுண்டரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். ஆலக்குடியில் ரெயில்வே கீழ்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப்பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், ரெயில் பயனாளிகள் உபயோகிப்பாளர் சங்கத்தை சேர்ந்த திருமேனி, கணேசன், தஞ்சை வர்த்தக சங்கம் காஜாமொய்தீன், செங்கழுநீர் ஏல அமைப்பாளர் ரவிச்சந்திரன், சரவணன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் உமர்முக்தர் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story