ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மருத்துவ கல்வியில் “நெக்ஸ்ட்“ தேர்வை புகுத்த கூடாது. இணைப்பு படிப்புகளை கொண்டு வருவதை தடுக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்தை ஒழிக்கும் முடிவை கைவிட வேண்டும், தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வர கூடாது, வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் சண்முக பாரதி தலைமை தாங்கினார். மாணவர் யாதவ் மற்றும் டாக்டர்கள் பிரவீன், ஆல்பர்ட், மகேஷ், சுரேஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் அனைவரும் தங்களது சீருடையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டத்தையொட்டி கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story