நெல்லை வேய்ந்தான்குளத்தில் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு


நெல்லை வேய்ந்தான்குளத்தில் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2019 10:00 PM GMT (Updated: 30 July 2019 7:26 PM GMT)

நெல்லை வேய்ந்தான்குளத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு நடந்தினார்.

நெல்லை, 

நெல்லை வேய்ந்தான்குளத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு நடந்தினார்.

குடிமராமத்து பணி

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம், மேலப்பாளையம் குறிச்சி ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பனிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேய்ந்தான்குளம், மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள பாளையங்கால்வாய் மக்களின் பங்களிப்போடு புனரமைக்கும் பனிகளையும் விரைந்து முடித்திட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 185 பணிகளை ரூ.43 கோடியே 30 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி நீர்நிலைகளை பாதுகாத்திட விவசாயிகளை கொண்டே பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகளை செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு நீர் நிலைகளுக்கு, குளங்களுக்கு, ஏரிகளுக்கு தேவையான பணிகளை குறிப்பாக கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நீர் உள்வரும் மற்றும் வெளிய செல்லும் பாதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளின் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீர் சேமிப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

கோதையாறு பகுதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிநில கோட்ட பகுதியில் ரூ.21 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 84 பணிகளும், தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.24 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் 90 பணிகளும், கோதையாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1 பணிகளும், வைப்பாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.3 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகளும் என 185 பணிகள் ரூ.49 கோடியே 30 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, உதவி ஆணையர் சுகி பிரேமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story