மருத்துவ மசோதாவுக்கு எதிர்ப்பு: கும்பகோணத்தில், டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கும்பகோணம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நேற்று டாக்டர்கள் பணியில் இல்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி இந்திய மருத்துவ கழக அலுவலகம் முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவர் கழக மாநில தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். கும்பகோணம் கிளை தலைவர் செல்வராஜ், செயலாளர் பாலகணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், அம்புரோஸ், தியாகராஜன், அன்பு உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினர்.

Related Tags :
Next Story