தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2019 1:55 AM IST (Updated: 3 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி; கோபியை சேர்ந்த ஊழியருக்கு வலைவீச்சு

கடத்தூர்,


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காராப்பாடியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 43). இவர் கர்நாடக மாநிலம் தேவனகிரியில் உள்ள விதை மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நிறுவனத்தில் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது மருந்துகளை விற்பனை செய்த பணத்தில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 760 குறைந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தமிழரசன் மருந்துகளை விற்பனை செய்துவிட்டு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 760-யை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் சில மருந்துகளை விற்பனை செய்யாமல் தானே வைத்துக்கொண்டதும், நிறுவனத்தின் ஜீப்புடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் மூத்த மேலாளர் நாகராஜ் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழரசனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story