செஞ்சி அருகே, பயணிகள் நிழற்குடை மீது மோதி கார் கவிழ்ந்தது - 2 பேர் சாவு


செஞ்சி அருகே, பயணிகள் நிழற்குடை மீது மோதி கார் கவிழ்ந்தது - 2 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Aug 2019 4:00 AM IST (Updated: 3 Aug 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே பயணிகள் நிழற்குடை மீது மோதிய கார், பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

செஞ்சி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சம்பத்குமார்(வயது 45). இவர் தனது உறவினர்களான கிருஷ்டு மனைவி செம்பா(22), இவரது குழந்தை லைலா(6), தோராயப்பன் மனைவி பத்தாச்சியம்மாள்(45), முத்தையகவுடா மனைவி சுமித்ரா(46) ஆகியோருடன் ஒரு காரில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்(29) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாலப்பாடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி பயணிகள் நிழற்குடை அருகே நின்று கொண்டிருந்த பாலப்பாடியை சேர்ந்த ஏழுமலை மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் பயணிகள் நிழற்குடை மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இதில் ஏழுமலை மற்றும் காரில் வந்த சம்பத்குமார் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஏழுமலை, சம்பத்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். செம்பா உள்ளிட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story