நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2019 10:45 PM GMT (Updated: 5 Aug 2019 5:39 PM GMT)

நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடித்த பின்னர் நெக்ஸ்ட் எனப்படும் மருத்துவ தேர்வை எழுதினால் மட்டுமே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவராக அங்கீகரிக்கப்படும் என இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து புறநோயாளிகள் பிரிவு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் இணைப்பு படிப்புகள் எனப்படும் பிரிட்ஜ் கோர்சை புகுத்த கூடாது. தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். கல்வியை மாநில உரிமையில் இருந்து பறிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story