காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி, அணைகள்-வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி, அணைகள்-வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:30 AM IST (Updated: 6 Aug 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேனி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதையொட்டி காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

காஷ்மீர் விவகாரம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வைகை அணை, சோத்துப்பாறை, அணை மஞ்சளாறு உள்ளிட்ட அணைகளிலும், பிரபல கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். மாவட்டம் முழுவதும் இந்த பாதுகாப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல், சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 More update

Next Story