தர்மபுரி மாவட்டத்தில், இந்தாண்டு 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தர்மபுரி மாவட்டத்தில், இந்தாண்டு 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 4:00 AM IST (Updated: 7 Aug 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் தர்மபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டில் இதுவரை 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் குற்ற பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 396 ஆக இருந்தது. இந்த ஆண்டு புதிதாக 151 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு குற்ற பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் குற்ற பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இவர்களில் 41 பேரிடம் நன்னடத்தைக்கான ஜாமீன் பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. குற்ற பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story