திருச்சி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை அமைச்சர் தகவல்
திருச்சி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், லெனின் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை சந்தித்து, வீட்டு வரி உயர்வு தொடர்பாக ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் வீட்டு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது இந்த பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். வீட்டு வரி உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைப்பதற்கு மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுவரை உயர்த்தப்பட்ட வரியை வசூலிக்க கெடுபிடி நடவடிக்கைகள் எதுவும் கூடாது என்று அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபரிசீலனை
அடுத்த மாதத்திற்குள் (செப்டம்பர்) வீட்டு வரி கட்டப்படவில்லை என்றால் அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தவறான தகவல். அபராதம் வசூலிக்க அரசிடம் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. முதல்-அமைச்சரின் ஆலோசனையின் படி வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்கு ஆவன செய்யப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட 61-65 வார்டுகளுக்கு வரி உயர்வு, உயர்த்தப்பட்ட வரிக்கு முந்தைய 2 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையினை வசூல் செய்வது குறித்து அந்தந்த பகுதி நலச்சங்கங்கள், மாநகர குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்து பேசி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, ஆணையரிடம் பேசி உள்ளேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story