மாவட்ட செய்திகள்

அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை + "||" + Worker slaughters with cricket bat near Ariyalur

அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை

அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை
அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட எரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது 56). கூலித் தொழிலாளி. இவருடைய மகனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையன்(50) மகனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.


இந்தநிலையில், கடந்த 5-ந்தேதி அந்த கிராமத்தில் உள்ள அரசமரத்தடியில் சின்னதம்பி, கருப்பையன் மற்றும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக சின்னதம்பிக்கும், கருப்பையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த கருப்பையன் அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து சின்னதம்பியின் மண்டையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னதம்பி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்னதம்பியின் மனைவி வெற்றிசெல்வி வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையனை கைது செய்தனர். கூலித் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை: எதிர்ப்பு தெரிவித்து பேரணி
அசாமில் சிகிச்சையில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் குடும்பத்தினர் தாக்கி மருத்துவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.
2. இரணியல் அருகே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தற்கொலை
இரணியல் அருகே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. லாலாபேட்டை அருகே வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
லாலாபேட்டை அருகே வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
4. சங்ககிரி போலீஸ் நிலையம் அருகே, குழந்தைகளுடன் விஷம்குடித்து மயங்கி கிடந்த தொழிலாளி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த தொழிலாளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து விட்டு சங்ககிரி போலீஸ் நிலையம் அருகே மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரியில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
5. ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி
ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.