100 நாள் வேலைகேட்டு கிராமமக்கள் மறியல்


100 நாள் வேலைகேட்டு கிராமமக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:00 AM IST (Updated: 8 Aug 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

கிராமமக்களுக்கு தற்போது 100 நாள் வேலை இல்லை என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 100 நாள் வேலைகேட்டு போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி ஊராட்சியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் 100 நாள் வேலையில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் போத்துராவுத்தன்பட்டி பகுதியை சேர்ந்த கிராமமக்களுக்கு கடந்த 3 மாத காலமாக 100 நாள் வேலை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகத்திற்கு கிராமமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்தவர்கள் கிராமமக்களுக்கு தற்போது 100 நாள் வேலை இல்லை என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 100 நாள் வேலைகேட்டு போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையர் பிரபாகரன், பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார், போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி செயலர் சக்திவேல் மற்றும் தோகைமலை போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story