பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திருவாரூர் நகரில் 12 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன நகராட்சி ஆணையர் தகவல்


பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திருவாரூர் நகரில் 12 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன நகராட்சி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:30 AM IST (Updated: 8 Aug 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகரில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 12 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன என நகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி சார்பில் நீர் செறிவூட்டுதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட்டு வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிக்க நகரில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் உள்ள குளத்தை அப்பகுதி ஜமாத் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நகராட்சி சார்பில் தூர்வாரும் பணியினை மேற்கொண்டனர். இப்பணியினை நகராட்சி ஆணையர் சங்கரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் நகரில் அனைத்து குளங்களும் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 குளங்கள் மக்களின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைத்து குளம், நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க அனைத்து அமைப்புகளும், பொதுமக்களும் முன்வர வேண்டும். மேலும் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அவசியம் அமைத்திட வேண்டும் என தெரிவித்தார். அப்போது அவருடன் நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன் உடன் இருந்தார்.


Next Story