மூக்குப்பொடி தூவி ரூ.2 லட்சத்தை பறித்து சென்றதாக மனைவியுடன் சேர்ந்து நாடகமாடிய நிதி நிறுவன ஊழியர் கைது
மூக்குப்பொடி தூவி ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றதாக மனைவியுடன் சேர்ந்து நாடகமாடிய நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
வையம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 31). இவரது மனைவி புஷ்பம் (32). பாலசுப்பிரமணியன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அந்த நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்து வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, கடன் தொகை ரூ.2 லட்சத்தை வசூல் செய்து கொண்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சியை அடுத்த கோணம்பட்டி அருகே வரும்போது, 3 மர்ம ஆசாமிகள் வழிமறித்து முகத்தில் மூக்குப் பொடியை தூவி, ரூ.2 லட்சம் இருந்த பையை பறித்துச்சென்றதாக நிதிநிறுவன மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை நம்பிய நிதிநிறுவன மேலாளர் அருண்ராஜ் இதுபற்றி துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பாலசுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்தார்.
போலீசார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவர், பணத்தை மோசடி செய்வதற்காக நாடகமாடியது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக அவரது மனைவியும் இருந்தார். சம்பவம் நடைபெற்ற கோணம்பட்டிக்கு மனைவி புஷ்பத்தை பாலசுப்பிரமணியன் வரவழைத்துள்ளார். அங்கு வைத்து புஷ்பம் கணவர் முகத்தில் மூக்குப்பொடியை தூவி பணத்தை வாங்கி சென்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பாலசுப்பிரமணியன் கடன் தொகை ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் வசூலித்துள்ளார். ஆனால் போலீசில் ரூ.2 லட்சம் பணம்தான் வசூலாகியுள்ளது என பொய் சொல்லியுள்ளார். இதனயடுத்து போலீசார் பாலசுப்பிரமணியின் வீட்டில் சோதனை நடத்தி, கடன் வசூல் தொகை ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது மனைவி புஷ்பத்தை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story