சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.
திருச்சி,
வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் ஆகியவற்றை வழங்க உள்ளார்.
இது தொடர்பான முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கல்வித்துறை அலுவலர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோருக்கு கட்டணமில்லாமல் போக்குவரத்து வசதி, தேவையான உணவு வசதி, இருக்கை வசதி ஆகியவற்றை வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் செய்து தர வேண்டும். சுதந்திர தின விழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
தீயணைப்புத்துறை அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் விழா நடைபெறவுள்ள ஆயுதப்படை மைதானத்தை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல் துறையினர் விழா நடைபெறும் மைதானத்தில் தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) டாக்டர் சம்சாத்பேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story