அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தாராபுரம்,
முன்னதாக மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தை மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது அமராவதி சிலையிலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தாலுகா அலுவலக வளாகத்தை அடைந்தது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்களை முன்னாள் நின்று வழிநடத்தியதற்காக, அவர் ஓய்வு பெறும் நாளில், அவருக்கு பணியிடை நீக்க உத்தரவு வழங்கியதை உடனே ரத்து செய்யவேண்டும். அவர் பணி ஓய்வு பெறவும், பணி ஓய்வு பலன்கள் பெறுவதற்கும், தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும், தமிழக அரசுதுறையில் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள், மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதால், அரசு ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கு உள்ளாகி அவதிப்படுகிறார்கள். எனவே அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணிடங்களை, முறையான காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்து நிரப்ப வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41-மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சுகாதார துறையில் மகப்பேறு இறப்பு மற்றும் குழந்தை இறப்புகளுக்கு, அத்துறையில் பணிபுரியும், கிராம சுகாதார செவிலியர்களே காரணம் என்று, அவர்கள் மீது மேற்கொண்டு வரும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிட வேண்டும் அனைத்து அரசு துறைகளிலும், அரசியல் தலையீடு என்பது, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இருந்து வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அரசு துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் நியாயமாகவும், சுதந்திரமாகவும் பணியாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story