15 ஊராட்சிகள் பயன்பெறும் 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பு ஏரி புதர் மண்டி கிடக்கும் அவலம் தூர்வார கோரிக்கை


15 ஊராட்சிகள் பயன்பெறும் 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பு ஏரி புதர் மண்டி கிடக்கும் அவலம் தூர்வார கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:00 AM IST (Updated: 11 Aug 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் அருகே 15 ஊராட்சிகள் பயன்பெறும் 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பு ஏரி புதர் மண்டி கிடக்கிறது. எனவே இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மதுக்கூர் வடக்கு கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

மதுக்கூர் வடக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருப்பு ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 420 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இந்த ஏரிக்கு பாட்டுவனாச்சி வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் இந்த பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

தூர் வார வேண்டும்

இந்த ஏரியை நம்பி 15 ஊராட்சிகளில் உள்ள 2,500 ஏக்கர் பரப்பளவு நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த கருப்பு ஏரியை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புதர் மண்டி தற்போது தரை மட்ட அளவில் ஏரி உள்ளது. மழை காலங்களில் கருப்பு ஏரிக்கு தண்ணீர் வந்தால் சில மாதங்களிலேயே ஏரியில் தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது.

இதனால் இதை நம்பி உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாகவே உள்ளது. எனவே குடிமராமத்து பணிக்காக குளங்கள் தூர் வாருவதுபோல், ஏரிகளையும் தூர் வார வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story