வெண்ணாற்றில் மணல் கடத்தல்: பழுதடைந்த லாரியை நிறுத்திவிட்டு தப்பிய ஆசாமிகள் போலீசார் விசாரணை


வெண்ணாற்றில் மணல் கடத்தல்: பழுதடைந்த லாரியை நிறுத்திவிட்டு தப்பிய ஆசாமிகள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்திய போது லாரி பழுதடைந்ததால் கடத்தலில் ஈடுபட்ட ஆசாமிகள் லாரியை சம்பவ இடத்திலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகில் உள்ள வெண்ணாற்றில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிலர் லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். லாரியில் மணல் அள்ளியவுடன் வெண்ணாற்றில் இருந்து லாரியை ஓட்ட டிரைவர் முயற்சித்தார். அப்போது லாரி பழுதடைந்தது. இதனால் டிரைவரால் லாரியை இயக்க முடியவில்லை. எனவே டிரைவருடன் இருந்த சிலர் லாரியில் பழுது நீக்க முயன்றனர். அப்போதும் லாரியை சரி செய்ய முடியவில்லை.

பறிமுதல்

இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆற்றிலேயே லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? பறிமுதல் செய்யப்பட்ட லாரி யாருக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story