புதுக்கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி அளவிலான யோகா போட்டிகள்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி அளவிலான யோகா போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்கம், புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பில், புதுக்கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி அளவிலான யோகா போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பிரிவு, சிறப்புப்பிரிவு ஆகிய 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதில் வயது அடிப்படையில் பொதுப்பிரிவில் 11 பிரிவுகளும், சிறப்புப்பிரிவில் 11 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை டாக்டர் ராமதாஸ், சொக்கலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சான்றிதழ்-பதக்கங்கள்
இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் 22 பேரில் 10 பேரை தேர்வு செய்து, வாகையர் பட்டம் வழங்கப் படும். இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் போன்றவை வழங்கப்பட்டது. இதில் ஆத்மா யோகா மைய நிறுவனர் பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி, தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story