கந்தம்பாளையம் அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
கந்தம்பாளையம் அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது. இதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்புகள் அனைத்தும் வெட்டும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் தீ பலமாக வீசிய காற்றின் காரணமாக வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அப் பகுதி பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில்் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலு வலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரும்புத் தோட்டத்தில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது.
குப்பை கிடங்கு
அதேபோல் நடையனூரில் உள்ள அரசு வங்கி எதிரே சாலையின் ஓரத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த குப்பை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பலத்த காற்றின் காரணமாக வேகமாக தீ பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை போராடி அணைத்தனர்.

Related Tags :
Next Story