தடிக்காரன்கோணம் கிறிஸ்து அரசர் ஆலய குருசடியில் உண்டியல் பணம் திருட்டு


தடிக்காரன்கோணம் கிறிஸ்து அரசர் ஆலய குருசடியில் உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

தடிக்காரன்கோணம் கிறிஸ்து அரசர் ஆலய குருசடியில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணத்தை அடுத்து உள்ள வீரபுலி பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே மாதா குருசடி உள்ளது.

நேற்று காலையில் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்கள், குருசடி உண்டியல் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், உடனே ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் வந்து பார்த்தனர்.

திருட்டு

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி கீரிப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Next Story