இலந்தைகூடம் திரவுபதை அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


இலந்தைகூடம் திரவுபதை அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 4:00 AM IST (Updated: 12 Aug 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

இலங்தைகூடம் திரவுபதை அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2 ஆண்டுகள் கழித்து நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட திரவுபதை அம்மன், அர்ஜூனன், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகள் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தை, அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மேள, தாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் இலந்தைகூடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

தீ மிதி விழா

தேரோட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரசேகர், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வடிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

Next Story