பெண் டாக்டர்கள், நர்சுகளுக்கு பயிற்சி


பெண் டாக்டர்கள், நர்சுகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 8:41 PM GMT)

மருத்துவ சங்கத்தின் சார்பில் சிக்கலான பிரசவங்களை எளியமுறையில் கையாளுவது குறித்து பெண் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்குமான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் 2 நாட்கள் நடந்தது.

திருச்சி,

திருச்சி மகளிர் மகப்பேறு மற்றும் மருத்துவ சங்கத்தின் சார்பில் சிக்கலான பிரசவங்களை எளியமுறையில் கையாளுவது குறித்து பெண் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்குமான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் 2 நாட்கள் நடந்தது. தொடக்க விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். இதில் மருத்துவ சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ரமணி தேவி உள்பட டாக்டர்கள் கலந்து கொண்டு மகப்பேறு மருத்துவத்தில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினர். சங்க செயலாளர் டாக்டர் புனிதா ராஜேஷ் கடந்த ஆண்டின் செயல்பாடு குறித்து பேசினார். முடிவில் பொருளாளர் டாக்டர் லட்சுமி பிரபா நன்றி கூறினார்.

2 நாட்கள் கருத்தரங்கில் சிக்கலான பிரசவங்களை எளிய முறையில் கையாளுவது குறித்தும், சிசு, தாய் உயிர் இழப்பை தடுக்கும் விதம் குறித்தும் பொம்மைகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் டாக்டர் தணிமலை தலைமையில் இந்த பயிற்சியை அளித்தனர். சுகப்பிரசவம், ஆயுதம் பயன்படுத்தி பிரசவம் பார்ப்பது குறித்து பொம்மைகள் மூலம் தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் நர்சுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது மயக்கவியல் மருத்துவத்துறையின் செயலாளர் டாக்டர் கணேசன் உடன் இருந்தார். 2-வது நாள் கருத்தரங்கில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் நந்திதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ உலகில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சியில் பிரபல பெண் டாக்டர்கள் ஜெயம் கண்ணன், ராமேஸ்வரி நல்லுசாமி உள்பட 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

Next Story