காவல் துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் டி.ஐ.ஜி.லோகநாதன் தொடங்கி வைத்தார்


காவல் துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் டி.ஐ.ஜி.லோகநாதன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 6:44 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பி்ரண்டு அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை வளத்தை பெருக்கிடவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் திருவாரூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த மரக்கன்றுகள் அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை சூப்பிரண்டு அலுவலகங்கள், போலீசார் குடியிருப்புகள் மற்றும் ஆயுதப்படை அலுவலகம் ஆகிய இடங்களில் நடப்படுகிறது. மரங்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டுகள் நடராஜன், முத்தமிழ்செல்வன், கார்த்திக், இனிகோதிவ்யன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story