திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி நூதன ஆர்ப்பாட்டம்


திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2019 4:30 AM IST (Updated: 13 Aug 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும், இரவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்கி இருக்க வேண்டும். பிரேத பரிசோதனை கூடத்தை சீரமைத்து குளிர்சாதன வசதி செய்து தர வேண்டும், எக்ஸ்ரே வசதி செய்து தர வேண்டும், பிரசவம் பார்க்க பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையின் முன்பு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் முக்காடு போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் கைகள், தலையில் அடிபட்டது போல கட்டு போட்டு கொண்டும் பெண்கள் தலையில் முக்காடு போட்டு பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சிவசாமி, சம்சுதீன், முருகேசன், பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர், மாதர் சங்க நிர்வாகிகள் சந்திரா, கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story