களியக்காவிளை அருகே பட்டப்பகலில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
களியக்காவிளை அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள குழிவிளை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பேபி (வயது 50). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 1 பவுன் மோதிரம் மற்றும் ரூ.2 லட்சம் திருட்டு போய் இருந்தது.
உடனே இதுகுறித்து அவர், களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வலைவீச்சு
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story