வருகிற 21-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை


வருகிற 21-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 5:44 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந் தேதி ஈரோடு வருகிறார்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை மூலம் வேளாளர் மகளிர் கல்லூரி, வேளாளர் மகளிர் பள்ளிக்கூடங்கள், வேளாளர் பொறியியல் கல்லூரி, வேளாளர் கல்வியியல் கல்லூரி, வேளாளர் செவிலியர் கல்லூரி என்று பல்வேறு கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கல்வி அறக்கட்டளை தொடங்கி 50-வது ஆண்டு பொன்விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் வருகிற 21-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதை முன்னிட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு வேளாளர் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Next Story