முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல் + "||" + from Mullaperiyar Dam, Go for the first paddy cultivation The water must be open
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு நீரினைபயன்படுத்துவோர், பாசன ஆயகட்டு விவசாயிகள் சங்கத்தினர், பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம் தலைமை தாங்கினார்.
நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தர்வேஸ்முகைதீன், கருங்கட்டாங்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பி.டி.ஆர். விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 17 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் முதல் போக நெல் சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதேபோல் முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை அலுவலர் தெய்வேந்திரன் பேசியதாவது:-
முதல் போக நெல் விவசாயம் செய்ய 1½ மாதம் தாமதம் ஆகி விட்டது. அதற்கு ஏற்றாற்போல விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும். மத்திய கால நெல் ரகங்களை தேர்வு செய்தால் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை மற்றும் குளிரில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நெல் ரகங்கள், உத்தமபாளையம் வேளாண்மை மையத்தில் தயாராக உள்ளன. இதற்கு கிலோவுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் நெல் நடவு எந்திரம் மூலம் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது நாளாக கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையில் மதகை இயக்கிப் பார்த்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைப்பு குறித்து இருமாநில அதிகாரிகள் காரசார விவாதம் நடத்தினர்.
முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயில் உள்ள செடி,கொடிகளை அகற்றி, சேதமடைந்த கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.