திருச்செந்தூரில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு - 2 அமைச்சர்கள் பங்கேற்பு


திருச்செந்தூரில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு - 2 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:06 PM GMT)

திருச்செந்தூரில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலையரங்கில், சென்னை தமிழ் சங்கம் சார்பில், பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சங்க புரவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். ஓய்வுபெற்ற அரசு முதன்மை செயலாளர் ராஜாராம் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பழமைவாய்ந்த அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தில் பழமைமாறாத வகையில் கல் மண்டபம் அமைக்கப்படும். அது வரையிலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இலங்கை கண்டி நகரில் உள்ள முருக பெருமான் கோவிலுக்கு இணையாக, கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் உள்ள கதிர்வேல் முருகன் கோவிலிலும் வேல் வடிவமே மூலவராக உள்ளது. அதனை சுற்றுலா தலமாக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மாநாட்டு மலரை வெளியிட்டார். அதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண் டார். தொடர்ந்து மாநாட்டு கருத்தரங்கை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா தொடங்கி வைத்து பேசினார்.

இலங்கை மந்திரி ராதாகிருஷ்ணன், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி, முத்துகுமாரசாமி தம்பிரான் சுவாமி, ரத்தினவேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமி, சிவப்பிரகாச தேசிக சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமி,

பாலமுருகனடிமை சுவாமி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி, சிவஞானபாலய சுவாமி, குமரகுருபர சுவாமி, மானாமதுரை சுவாமி, சுதர்சனாச்சாரியா சுவாமி ஆகியோர் முருகபெருமானின் பெருமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story