மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில், அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி + "||" + In different accidents, 2 dead, including a admk prominent person

வெவ்வேறு விபத்துகளில், அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில், அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலியாகினர்.
பரமத்திவேலூர், 

நாமக்கல் டவுன் எஸ்.கே.கார்டனை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). அ.தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் நாமக்கல்லில் உள்ள திருச்சி ரோட்டில் சென்றார். பின்னர் அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது முருகேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதியது.

இந்த விபத்தில் முருகேசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி காயம் அடைந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள பளக்காட்டுபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). தையல் தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரசேகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).
2. ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஜோலார்பேட்டையை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
3. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
4. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
5. புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் பலி
புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.