மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு + "||" + Police protection at Thiruchendur temple on Independence Day

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகாரம் மற்றும் கடற்கரை பகுதியில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.


போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாஸ்கர், வெடிகுண்டு நிபுணர் சின்னத்துரை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.