நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அன்பழகன் ஆய்வு


நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அன்பழகன் ஆய்வு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைக்காளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில் சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் பயனுள்ள வகையில் இருக்கின்றதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

தூய்மையாக...

இந்த முகாமில் பொதுமக்களுக்கு ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மழைக்காலங் களில் உரல், டயர் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதால் டெங்கு பரவுவது குறித்தும், எனவே முன்எச்சரிக்கையாக வீடுகள், கடைகள், நிறுவனங்களில் அது போன்றவற்றை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். வட்டார மருத்துவர் அருண்குமார் தலைமையிலான டாக்டர்கள், செவிலியர் குழுவினர் இந்த முகாமினை நடத்தினர்.

Next Story