மாவட்ட செய்திகள்

தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரி உத்தரவு + "||" + The officer's orders should be completed quickly

தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரி உத்தரவு

தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரி உத்தரவு
தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நிதித்துறை துணை செயலாளர் அரவிந்த் கூறினார்.
மன்னார்குடி,

தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்டம் மற்றும் திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்டம் ஆகியவற்றுக்குட்பட்ட கட்டேரி வாய்க்கால், மாலையிட்டான் வாய்க்கால், அரவத்தூர் வாய்க்கால், கண்ணம்பாடி வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வடிகால் வாய்க்கால் மற்றும் வாய்க்கால்களில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மன்னார்குடியில் நடந்தது.


கூட்டத்தில் நிதித்துறை துணை செயலாளரும், மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியுமான அரவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வு

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிறப்பு தூர்வாரும் பணிகளை எவ்வளவு விரைவில் செய்து முடிக்க முடியுமோ முடிக்க வேண்டும்.

இதற்காக மேலும் அதிக கனரக வாகனங்களை உபயோகப்படுத்தி கொள்ளலாம். இரவு நேரங்களிலும் கூடுதலாக நேரம் எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தில் நடைபெற்ற பணிகள் குறித்த முழு அறிக்கையையும் அன்று இரவு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் வாய்க்கால் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வில்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரி ஆய்வு
உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமை பொறியாளர் முருகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
3. திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி
திருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.
4. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பொது இடங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்
பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா அறிவுறுத்தி உள்ளார்.